கோவை - பாலமலை, 
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில். 


கோவை அருகே 27 கிமீ தொலைவில், 250 வருடம் பழமை வாய்ந்த, 
ஸ்ரீ ராமானுஜம் அவர்கள் போற்றிய, பாலமலை அரங்கநாதர் கோவில்.
மேற்குத்தொடர்ச்சி மலையில், இயற்கை சூழலில் இந்த கோவிலை சுற்றி 
மங்குனி, பசிமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கபதிபுதூர் ஆகிய 
சுமார் 6 கிராமங்கள் உள்ளன. அங்கே இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். 
போக்குவரத்து வசதி ஏதும் இல்லை. ஜீப் அல்லது நடை பயணம்தான். ஆதி காலத்து கோவில் தோன்றிய காலம், படிப்படியாக கோவில் உருவாக்கிய விதம் போல, இருளர் பழங்குடி மக்களுக்கும் இக்கோவிலுக்கும் நிறைய தொடர்பு உள்ளன. அன்று கோவில் கட்ட மிகவும் உறுதுணையாக இருந்த பழங்குடி மக்களின் தலைமுறை வாரிசுகள் சம்பந்தப்பட்ட விழா, வருடா வருடம் சித்திரா பௌர்ணமி அன்று சிறப்பாக நடந்துகொண்டு இருக்கு. 
ஒரு நாள் பயணமாக பொழுதை கழிக்க, இக்கோவிலுக்கு குடும்பத்துடன் செல்லலாம்.
விரிவான வீடியோ ஆவணம் மற்றும் வரலாறு கீழே உள்ள வீடியோ லிங்கினில் உள்ளது. 

You may also like

Back to Top