Bone broth 
எலும்பு + கீரை சூப்
ஸ்லோ குக்கரில் எலும்பு மற்றும் மஞ்சள்தூளும் உப்பும் சேர்த்து ஒன்றரை நாள் கொதிக்க விடவேண்டும். பிறகு கொதித்த சூப்பில், தங்களுக்கு வேணுங்கிற அளவு எடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் + பச்சைமிளகாய் 2 + கீரை ஒரு கை அளவு +   மிளகுத்தூள் சேர்த்து, கூட ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து கொதிக்க விடவும். எருமை வெண்ணை சிறந்தது. பிறகு கிண்ணத்தில் ஊற்றி ருசிக்கவும். பேலியோவில் எடை குறைப்பு மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற, சிறந்த காலை வேலை உணவு.    
BUFFALO BUTTER TEA
பட்டர் டீ  இல்லாத பேலியோ வா ! 
ஒரு கோப்பையில் முக்கால்வாசி எருமை பால் அல்லது பசும்பால் எடுத்துக்கொள்ளவும். கால் அளவு தண்ணீர் சேர்க்கவும். கூட 30 கிராம் பசு (அ) எருமை வெண்ணையுடன், வேணுங்கிற அளவு டீ தூள் சேர்த்து அனைத்தும் ஒன்றாக கொதிக்கவிடவும். நோ இனிப்பு (அஸ்கா - கரும்பு சக்கரை). 
 3 - 5 நிமிடம் நன்றாக கொதித்த பின்பு வடிகட்டி, கூட பாலாடை சேர்த்து பருகினால் மதியம் 3 மணிவரைக்கும் பசி என்பதே வவுருக்கு தெரியாது !     
PALEO IDLI
பேலியோ இட்லி
தேங்காய் + முட்டை + பனீர் 

200 கிராம் பனீரை நன்றாக பிணைந்து கொள்ளவும். கூட 5 ஸ்பூன் தேங்காய் துருவலை நன்றாக மிக்சியில் அரைத்து, 2 முட்டையுடன், உப்பு சேர்த்து பனீருடன் சேர்த்து பிணைந்துகொள்ளவும். இட்லி தட்டில் நெய் விட்டு, ஒவ்வொரு குழுயில் வேணுங்கிற அளவு வைத்து, இட்லி பாத்திரத்தில் கொதிக்க விடவும்.  கொதித்து நன்றாக ஆறிய பிறகு, இட்லி தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.    
தொட்டுக்க கத்திரிக்காய் கூட்டு அல்லது ஏதேனும் குழம்பு . பேலியோவில் காலை அலல்து இரவு உணவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் இட்லி பதத்துக்கு வராது !     
PALEO LUNCH
முட்டை + மீன் ரோஸ்ட் + பீட்ரூட் பொரியல் 
2 மீன் துண்டுகளை மஞ்சள்தூள் + மிளகாய்த்தூள் + உப்பு சேர்த்து 2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய், நெய்  இட்டு திருப்பி போட்டு, திருப்பி போட்டு வேகவைக்கவும். கூட 3 முட்டை மற்றும் பீட்ரூட் பொரியல், ஆக  இவை அனைத்தும் சேர்த்து  பேலியோ மதிய வேலை உணவை திருப்தியாக ருசிக்கலாம். ​​​​​​​
PALEO DINNER
குலுக்கி மீன் ! 
அரை கிலோ மீன் !
ஜிலேபி அல்லது பாறை மீன் போல அகலமான மீன் வகை சிறந்தது. வெட்டும்போதே ஒரு மீனை 3 துண்டுகளாக வெட்டி வாங்கவும். சின்ன சின்ன துண்டுகளாக வெட்டினால் குழைந்துவிடும், சமைத்த பின்பு ருசி இருக்காது. நன்றாக கழுவி உப்பு + மஞ்சள்தூள் + மிளகாய்த்தூள் + மல்லி தூள் சேர்த்து கிளறி ஒரு அரை நாள் பிரிட்ஜில் வைக்கவும். பிறகு ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி கூட 3 பச்சைமிளகாய் கீறி, எண்ணெய் விட்டு, வட சட்டியில் வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து,  பின்பு மீனை சட்டியில்  போட்டு மூடி வைத்து 2- 3 நிமிஷத்துக்கு ஒருக்கா சட்டியை எடுத்து குலுக்கி, குலுக்கி வைக்கவும். மூன்றாவுது, நான்காவுது  குலுக்கலில் மீன் வெந்துவிடும். அப்புறம் எடுத்து தட்டில் போட்டு, கொக்க மக்க, அந்த ருசி இருக்கே.. 
கூட வாத்து முட்டை ஆம்பலேட் ஒன்று சேர்த்து சாப்பிடுங்க. செமையா இருக்கும். அதுவும் அந்த மீன் தலை !!  
இது எங்கூரு டேஸ்ட்டுங்கோ ! 
சாப்ட்டு பாருங்கோ !  
இரவுக்கு ஏற்ற பேலியோ உணவு.   
PALEO DINNER
கல் மீன் ரோஸ்ட் ! 
அரை கிலோ மீன் !
பெரிய துண்டுகளாக வெட்டி, நன்றாக கழுவி, மஞ்சள்தூள் + மிளகாய்த்தூள் + மல்லித்தூள் + சோம்புத்தூள் + மிளகுத்தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறி, அரை  நாள் பிரிட்ஜில் வைக்கவும். தோசை கல்லில் நெய் அல்லது வெண்ணை விட்டு மீன் துண்டுகளை வைத்து மூடி போட்டு மூடி, 2- 3 நிமிஷத்துக்கு ஒருக்கா, மீன் துண்டுகளை  திருப்பி போட்டு மூடி வைக்கவும். வெந்த பிறகு வெண்டை அல்லது ஏதேனும் பொரியலுடன் இரவு நேர பேலியோ உணவு தயார்.  
இரவுக்கு ஏற்ற பேலியோ உணவு.   
PALEO UPPUMA!
பேலியோ உப்புமா !
பனீர் + முட்டை + தேங்காய் துருவல்.
ஒரு பெரிய வெங்காயம் + 2 பச்சைமிளகாய் + 100கி பனீர் + 1 முட்டை + 5 ஸ்பூன் தேங்காய் துருவல் + கடுகு, கறிவேப்பிலை.
தேங்காய் துருவலை உப்பு, 1 பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு, தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் ஒரு 20 sec சுற்றவும். பின்பு பனீரை நன்றாக பிணைந்து கொண்டு, 1 முட்டை + அரைத்து வைத்த தேங்காய் துருவலை அதனையுடன் சேர்த்து நன்றாக பிணைந்த்து விட்டு, சட்டியில் தேங்காய் எண்ணெய்  உண்டுன்னு ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,

பேலியோ உப்புமா !
பனீர் + முட்டை + தேங்காய் துருவல்.
1 பச்சைமிளகாய் கீறி  தாளித்து, பிணைந்து  வைத்த அனைத்தையும் சட்டியில் போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடத்தில் வெந்துவிடும்.  பிறகு தட்டில் போட்டு ஏதேனும் பொரியலோ அல்லது குழம்போ தொட்டு சாப்பிடலாம். சிறந்த இரவு பேலியோ உணவாகும்.  
ONE MEAL A DAY (OMAD)
பீப் ரோஸ்ட் + 
சீஸ் ஆபாயில் 
கொழுப்புடன் அரை கிலோ பீப், நன்றாக கழுவி, மஞ்சள்தூள் + மிளகாய்த்தூள் + மல்லித்தூள் + தேவையான உப்பு சேர்த்து, 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கிளறி, அரை நாள் பிரிட்ஜில் வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி + பச்சைமிளகாய் 2 நீளவாக்கில் நறுக்கி, இஞ்சி + பூண்டு விழுது கொஞ்சம் சேர்த்து ஓபோஸ் முறையில் 10 நிமிடம் குக்கரில் வேகவைக்கவும். பிறகு வெந்த கறியை எடுத்து தோசை கல் அல்லது இரும்பு சட்டியில் தேங்காய் எண்ணெய், நல்லா உண்டுன்னு ஊற்றி, கறியை அதில் 5 நிமிடம் கிளறி, மல்லி இலைகளை தூவி இறக்கவும். 3 முட்டை + சீஸ் ஆபாயில் இதனுடன் சேர்த்து ஒரு நாள் ஒரு வேலை உணவு உண்ணவும். அதாவுது 23:1 omad,  
விரத நாளுக்கு ஏற்ற, ஒரு வேலை சிறந்த பேலியோ இரவு உணவு.    

 

PALEO DOSA !
முட்டை + தேங்காய் மாவு - சிம்பிள் !

1 தேங்காய் துருவி, மிக்சியில் அதனை பாலாக அடித்தது, ஏலக்காய் போட்டு காய்ச்சி, காலை வேலை உணவாக அதனை பருகி கொள்ளுங்கள். அந்த பாலை பிழிந்த தேங்காய் சக்கை இருக்குமல்லவா, அதனை தூக்கி எறியாமல்,  ஒரு தட்டில் பரப்பி வெயிலில் நன்றாக மொறு மொறுன்னு காய வையுங்க. அடுத்த நாள் அதனை மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டுங்கள். நன்றாக மாவு போல வரும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, 2 முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக beat செய்யவும். சூடு தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும் (அரை கரண்டி). கலக்கிய முட்டை வெள்ளை கரு + தேங்காய் மாவை,  சின்ன கரண்டியில் எடுத்து தோசை கல்லில் ஊற்றி, என்னை விட்டு, அதில் ஒரு மஞ்சள் கருவை சேர்த்து, சிறிது சீஸ் துருவல் இட்டு,        வெந்தவுடன், கத்திரிக்காய் கூட்டு + தேங்காய் சட்னி சேர்த்து ருசிக்கவும். பேலியோவில் இருப்பவர்களுக்கு சிறந்த இரவு உணவாகும்.   

You may also like

Back to Top