ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை, அருள்மிகு ஸ்ரீ சக்தி காமாட்சி அம்மன்  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 2021. 
தற்சமயம் கோவிட் -19 தொற்று காரணமாக, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், கமிட்டியார் மட்டும் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்ள 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்து கோவிட் கட்டுப்பாடுகளுடன் மிக எளிமையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  
சித்திரை மாதம் 11 ஆம் நாள்  (24.04.2021) உற்சவமூர்த்தி, பொன்னாபரணங்கள், கலசம், யாகபூஜை பொருட்கள் கோவில் எடுத்துவரப்பட்டது. அன்று மாலை 5.00 மணியளவில்  அறக்கட்டளை நபர்கள் மற்றும் சில பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து முளைப்பாரி,  தீர்த்தக்குடம் எடுத்து கோவில் வந்தனர். மாலை 6.00 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. 
 சித்திரை மாதம் 12 ஆம் நாள்  (25.04.2021) காலை 5.00 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு மேல் கலச பூஜைகள் நடைபெற்று, கலசத்தை கோவில் கோபுரம் மேல் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக சிலைகளுக்கு பூஜைகள் செய்து, கோ பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.  மாலை 6.00 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெற்று, யாகசாலையில் சுவாமிகள் எழுந்தருளச்செய்து முதற்கால வேள்வி பூஜை ஆரம்பிக்கப்பட்டது. 
சித்திரை மாதம் 13 ஆம் நாள்  (26.04.2021) காலை 4.00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்று, தொடர்ச்சியாக பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்று, காலை 6.00 மணிக்கு ஸ்ரீ சக்தி காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா மிக  எளிமையான முறையில்  நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை தொடர்ந்து திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானம் இரண்டு பைகளில்,பொதுமக்கள் கைகளில் கொடுக்கப்பட்டது.  யாகசாலை பூஜைகள் திரு. s.ராம்கோடி சிவாச்சாரியார் முன்னின்று நடத்திகொடுத்தார். கோவில் அர்ச்சகர்கள் திரு.மணி மற்றும் திரு.மாணிக்கம் கூட இருந்தனர்.  மேலும் 12 நாட்களுக்கு மட்டும் மண்டல பூஜைகள் நடைபெறும். 
இந்த கும்பாபிஷேக விழாவில் பெருமளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை காணவே இப்புகைப்படத்தொகுப்பு.  
போட்டோ மற்றும் வீடியோ : 
திரு.ஜெ.சண்முகராஜா, 
ஓவியா கலைக்கூடம், சத்தியமங்கலம். 
தொடர்புக்கு : +91 98659 50020  / +91 7598120622
                  
PHOTOGRAPHY : SHANMUGA RAJA J
+91 98659 50020

You may also like

Back to Top